IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நான் மட்டும் ஹெல்மெட் போட்டிருந்தால்…?! கதறி அழும் லலிதா ஜுவல்லரி கொள்ளையனின் மனசாட்சி!!

Get real time updates directly on you device, subscribe now.


தமிழகத்தையே உலுக்கிய லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் இருதினங்களுக்கு முன் சுமார் 30 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களை திருவாரூர் போலீசார் கைது செய்து திருச்சி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இந்த கொள்ளை சம்பவத்தில் மணிகண்டன் என்ற முதன்மை குற்றவாளி போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளார். இவர் சிக்கியதற்கு முதன்மை காரணம் ஹெல்மெட். ஆம் அன்று மட்டும் ஹெல்மெட் போட்டு சென்றிருந்தால் போலீசாரும் என்னை மடக்கி பிடித்திருக்க மாட்டார்கள். நானும் எனது கூட்டாளியும் நகைகளுடன் செட்டிலாகி இருப்போம்.
போலீஸில் சிக்கிய லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள்


வாழ்க்கையை ஆடம்பரமாக வாழ உயிரையே பணயம் வைத்து நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டோம். கோடிக்கணக்கான நகைகளையும் திருடிக் கொண்டு சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தோம்.


ஆனால் வெறும் 500 ரூபாய் மதிப்புள்ள ஹெல்மெட் வாங்கி போடாமல் சென்றதால் எங்களுடைய கனவுகள் அனைந்தும் கலைந்தன. எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்ட நகைகள் அனைத்தையும் தற்போது போலீசார் மீட்டுள்ளனர். நாங்களும் காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டு இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
தமிழக போலீசாருக்கு சவாலாக இருக்கும் ஹிந்திக்கார கொள்ளையர்கள்


ஆகவே அரசாங்கம் எப்போதும் நன்மைக்கு தான் சொல்வார்கள். அரசாங்கத்தின் பேச்சை என்மைப் போன்று எவரும் உதாசினப்படுத்தாதீர்கள். இதுபோன்று நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டனின் மனசாட்சி ஹெல்மெட் குறித்து யோசித்திருப்பார் என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது கருத்தை பதிவு செய்கின்றனர்.
#Manikandan #LalithaJewellery #Helmet #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader