IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மண்டபம் கேம்ப் மக்கள்

Get real time updates directly on you device, subscribe now.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கேம்ப் அம்பேத்கர் நகரை சேர்ந்த தமிழ்புலிகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

இந்த நிலையில் அருகில் உள்ள முனைக்காடு பகுதியில் திடீரென மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எங்கள் பகுதியில் வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ளது. மேலும், இந்த வழியாக பெண்கள், குழந்தைகள் சென்றுவர முடியாத நிலை ஏற்படும்.

எனவே, உடனடியாக மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிட்டு எங்களின் பாதுகாப்பிற்கு வழிவகை செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader