IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஒன்பது வயது சிறுமியை முரட்டுதனமாக தாக்கிய தந்தை கைது

73


ஒன்பது வயது சிறுமியை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.


மதுரை திருமங்குலம் கொடிமர தெருவை சேர்ந்தவர் அப்துல் சமது. இவருக்கு ஒன்பது வயதில் ஒரு மகள் உள்ளார். அப்துல் திடீரென தனது மகளை வீட்டின் முன்பு தொருவில் வைத்து டியூப்லைட் மற்றும் காலணிகளை கொண்டு கடுமையாக தாக்கினார். மேலும் சரமாரியாக உதைத்தார். அதில் சிறுமி படு காயம் அடைந்தாள்.


இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுமி தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


இது குறித்து திருமங்குலம் ஆர்.டி.ஓ. முருகேசனுக்கு தெரிய வந்தது. பின்னர் அவரது உத்தரவின் படி கிராம நிர்வாக அழுவலர் பாண்டியராஜன் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அப்துலை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தனக்கு தெரியாமல் தனது மகள் மனைவியை பார்த்துவிட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்து மகளை தாக்கியதாகவும் போலீசாரிடம் அப்துல் தெரிவித்துள்ளார்.


இதைத் தொடர்ந்து சிறுமியை தாக்கிய தந்தை அப்துலை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறுமியை டியூப் லைட்டால் தாக்கியது, பொதுமக்களை அச்சுறுத்தியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அப்துல் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


#Man #arrested #girl #Hit