IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொது செயலாளராக (தெற்கு மற்றும் மேற்கு) CK குமரவேல் நியமனம்

0 35

கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி கிராம சபை கூட்டங்களில் மக்கள் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகின்றனர். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த உடனே செய்த விஷயம் கிராம சபை கூட்டமாகும். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கிராம மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கிராம சபை அமைப்பு பெரிதாக நடைமுறைக்கு வராமல் முடங்கியிருந்த நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி அதை செயல்பட வைக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் துவங்கி 14 மாதங்களில் அனைத்து தொகுதிகளிலும் நின்று அனைவரும் பாராட்டும் வகையில் பெரும் ஆதரவினைப் பெற்று அனைவருக்கும் உற்சாகத்தை அளித்து வருகிறது.

அதே நேரம், தமிழக அரசியலை மாற்றியமைக்க வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில், மக்களுக்கான உண்மையான நேர்மையான அரசு அமைத்திட, நாம் இன்னும் வலிமையோடு களத்தில் இறங்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது.

ஒவ்வொரு வாக்காளரையும் நமது கட்சியின் செயல் வீரர்கள் நேரடியாக களத்தில் சந்திக்க வேண்டும் என்கிற விருப்பத்தின் காரணமாக நமது கட்சியின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக கட்சியின் மாநில நிர்வாகிகள் கீழ்க்கண்டவாறு விரிவுபடுத்தி அறிவிக்கப்படுகிறார்கள்.

கட்சியின் தொண்டர்கள் அனைவரும் இவர்களோடு ஒத்துழைத்து, மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்கின்ற எமது லட்சியத்திகு உறுதுணையாக இருந்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தலைமைச் செயலகத்தின் பொதுச் செயலாளராக அருணாச்சலம், வடக்கு மற்றும் கிழக்கின் பொதுச் செயலாளராக மௌர்யா, தெற்கு மற்றும் மேற்கின் பொதுச் செயலாளராக C.K.குமரவேல், ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளராக சௌரிராஜன், அணி பொதுச்செயலாளராக உமாதேவி ஆகியோரை இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதனாலே வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகமே இந்த பொதுச் செயலாளர்களின் அறிவிப்பு என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.