IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் ஆஃப்லைன் பயண முகவர்களாக மேக்மைடிரிப் அறிமுகப்படுத்தும் மைபார்ட்னர்

Get real time updates directly on you device, subscribe now.

  • கோயில் நகரத்தில் பயண முகவர்களுக்கு ஆற்றலை வழங்க மேக்மைடிரிப் பி2பி2சி வணிகம் தொடக்கம்
  • பல்வேறு சந்தைகளிலுள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கான பயணப் பட்டியலின் விரிவான தேர்வு மற்றும் மேம்பட்ட பதிவு அனுபவங்களை வழங்க உதவி தொடர்பான அணுக்கத்தைப் பயண முகவர்கள் பெறுவர்

பயணிகளுக்கு தடையற்ற மற்றும் விரிவன பயணப் பதிவு வழங்கப் பயண முகவர்களுக்கு ஆற்றலை வழங்கவும், உதவி செய்யவும் பிரத்யேக தளமான மைபார்ட்னர் அறிமுகம் குறித்த அறிவிப்பை மேக்மைடிரிப் அறிவித்ததுள்ளது. நுண்ணோக்கு மற்றும் பயனீட்டாளர் நட்பான இத்தளம் ஆஃப்லைன், உள்ளூர் பயண முகவர்கள் ஆகியோருக்கு ஆன்லைன் பயணப் பட்டியலிலிருந்து மிக விரிவான தேர்வு அணுக்கத்தை வழங்கும். மைபார்ட்னர் தளம் பல்வகையான பயண வாய்ப்புகள், நுகர்வோர் விருப்பமாக்கம், தனிப்பயனாக்கம் மற்றும் வாடிக்கையாளரின் பயணப் பதிவு வசதி ஆகியவற்றை இயலச் செய்யும்.

மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் டிஜிடல் தொழில்நுட்பத்தை ஏற்கும் விரைவான மாற்றம் கோவிட்-19 கொள்ளை நோய்க் காலத்தில் இன்னும் அதிக வேகம் எடுத்தது. வாங்கும் முடிவுகளைச் சிறப்பாக எடுக்க வசதியாக ஆன்லைனுக்கு மாறியதால் பயணிகளின் வாங்கும் போக்கில் கணிசமான மாற்றம் ஏற்பட்டது. மிக வேகமாக வளரும் சூழலுக்கு உள்ளூர், ஆஃப்லைன் பயண முகவர்கள் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்ய டிஜிடல் தொழில்நுட்பத்துக்கு மாறுவதுடன் புதிய இயல்பில் அவர்களைடைய கோரிக்கைகளை நிறைவேற்ற ஒட்டுமொத்த வாடிக்கையாளர் சேவை அளவுகளையும் மேம்படுத்த வேண்டும். அனைத்து ஆஃப்லைன் பயண முகவர்களின் அன்றாட முன்பதிவு செய்முறையை ஒரே மாதிரியாக டிஜிடைசிங்க் செய்யவதுடன், மெட்ரோ நகர எல்லைகள் தாண்டி சிதறிக் கிடக்கும் உள்ளூர் பயணச் சந்தையும் மிகப் பெரிய அளவில் பயன் பெறும் வகையில் மைபார்ட்னர் புதிய கருதுகோளை வடிவமைத்து உருவாக்கி உள்ளது. அனைத்து பயணப் பிரிவுகளிலும் நிகழ் நேர பட்டியலுக்கான அணுக்கம் காரணமாக, II & III நிலை நகரங்கள் மற்றும் இவற்றைத் தாண்டி உள்ள உள்ளூர் முகவர்கள், பயணிகளுக்குத் எளிதான மற்றும் ஒளிவு மறைவற்ற தகவல்களை வழங்குவதுடன் முன்பெப்போதும் இல்லாத புதிய பயண வாய்ப்புகளையும் தர இயலும்.

மைபார்ட்னர் தளம் குறித்து மேக்மைடிரிப் குழு சிஇஓ ராஜேஷ் மேகோ கூறுகையில் கொள்ளை நோய் காரணமாகப் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் பயணத் துறையை மீட்டெடுக்க மதிப்புச் சங்கிலியில் அங்கம் வகிக்கும் சம்மந்தமுள்ள அனைவரின் ஆழமான மற்றும் விரிவான ஒருங்கிணைப்பைப் பயணச் சூழலமைவு எதிர்பார்க்கிறது. எங்களது மைபார்ட்னர் மூலம் உள்ளூர் மற்றும் பன்னாட்டு ஹோடல்களின் மிகச் சிறந்த கட்டண விவரப் பட்டியலின் அணுக்கத்தை நாட்டிலுள்ள பயண முகவர்கள் அனைவருக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம். பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் சூழலில் விரைந்து மீண்டு வர இது உதவுமென நம்புகிறோம்・என்றார்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader