IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கருப்பட்டி பொங்கல்

119

தேவையான பொருட்கள் :

கருப்பட்டி தூள் – 1 கப், அரிசி – 1 கப், பால் – 3 கப், நெய் – 1/4 கப், ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன், முந்திரி – 4, உலர் திராட்சை – 1 டீ ஸ்பூன், பாதாம் – 4, பிஸ்தா – 1 டீ ஸ்பூன்.

இப்படித்தான் செய்யணும் :

* முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் இரண்டு கப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

* இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து தீயை சிம்மில் வைத்து கம்பி பாகு காய்ச்சி கொள்ளவும்.

(சாதம் லேசாக வேக ஆரம்பித்ததும் பாகு காய்ச்ச ஆரம்பித்தால் போதும்.. பாகு ஆனவுடனேயே சாதத்தில் சேர்த்து கிளற வேண்டும். இல்லாவிட்டால் பாகு இருகிப் போய்விடும்.)

* பாத்திரத்தில் வேக வைத்த அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

* பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சிய பாகை சேர்த்து நன்கு கிளறவும்.

* மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து நன்கு கிளறவும்.

* கொதிக்க ஆரம்பித்த பிறகு, நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறவும்.

* எல்லாம் நன்றாக சேர்த்து பொங்கல்ப்பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

* முந்திரி திராட்சையை சேர்த்து கிளறவும்.

* பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.

சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்