IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆப்பிள், சாம்சங் புதிய ஆலைகள் அமைக்க அனுமதி

Get real time updates directly on you device, subscribe now.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆப்பிள், சாம்சங் உட்பட 10 ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், 6 மின்னனு சாதன உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை இந்தியாவில் புதிய ஆலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தி சாந்த ஊக்குவிப்பு அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் ஆகியவை இந்தியாவை தனது பிரதான உற்பத்தி மையமாக படிப்படியாக மாற்றி வருகின்றன. உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் அமைய இருப்பதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

இத்திட்டத்தில் இந்தியாவைச் சோ்ந்த லாவா, மைக்ரோமேக்ஸ், பேட்ஜெட் எலெக்ட்ரானிக்ஸ், யுடிஎல், ஆம்டிமஸ் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மட்டுமே இந்த நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படவுள்ளன. மேலும், இவற்றில் 60 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader