IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அவல் பொங்கல்

77

தேவையான பொருட்கள் :

அவல் – 1/2 கிலோ, வெல்லம் – 1/2 கிலோ, பாசிப்பருப்பு – 150 கிராம், ஏலக்காய் – 6, கிஸ்மிஸ் பழம் – 20, தேங்காய் பால் – 200 மி.லி, காய்ச்சிய பால் – 200 மி.லி, பொடியாக நறுக்கிய தேங்காய் – 1, நெய் – 100 கிராம், உப்பு – ஒரு சிட்டிகை.

இப்படித்தான் செய்யனும் :

* வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பை குழைய வாகவைத்துக் கொள்ளவும்.

* அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

*வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.

* வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்து அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.

* அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமா சேர்த்து விடக் கூடாது.

* நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம், வறுத்த தேங்காய், மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி விடவும்.

நெய் மணத்துடன் சுவையான அவல் பொங்கல் தயார்

#Aval #Pongal