IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்

0 101


பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மகிந்திரா குழுமத்தின் அங்கமான மஹிந்திரா டிரக் அண்ட் பஸ் (எம்டிபி) நிறுவனம், தனத ப்ளேஸோ டிரக்குகள் தான் இந்த பிரிவிலேயே அதிக மைலேஜ் தரும் வாகனமாக சந்தையில் முன்னணியில் திகழ்கிறது என்று அறிவித்துள்ளது. ப்ளேஸோ டிரக் ரகங்கள், அறிமுகம் செய்யப்பட்ட 3 ஆண்டுகளில் இந்த சிறப்பான சாதனையைப் படைத்துள்ளதுடன் தற்போது சந்தையில் மற்ற நிறுவன டிரக்குகளை ஒப்பிடுகையில் முதன்மையாக விற்பனையில் இருந்து வருகிறது. பிஎஸ் 6 தரத்திலான வாகனங்களை அறிமுகம் செய்து, எம்டிபி நிறுவனம் தனது நிலையை உறுதி செய்து சிறந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பிஎஸ் 4 தரத்திலான வாகனங்களில் 80 சதவீத பாகங்களை மாற்றாமல் பிஎஸ் 6-ஐஎளிமைப்படுத்தி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க மகிந்திரா முயற்சி எடுத்து வருகிறது.


ப்ளேஸோவின் இயல்பான நன்மைகளான அதிக மைலேஜ் மற்றும் அதிக எடை தாங்கும் திறன் ஆகியவற்றுடன் கூடிய ’ப்ளேஸோ எக்ஸ் 49’என்ற கடின எம்ஏவி டிரக்கை 16 சக்கர பிரிவில் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இடைநிலை வணிக வாகனப்பிரிவில் எம்டிபிடி-யின் ஃப்யூரியோ (furio) மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 1 மற்றும் 14 டன் பிரிவில் 4-வது பெரிய இடத்திற்கு முன்னேறியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் இதே பிரிவில் அண்மையில் மேலும் 3 வகைகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் விரிவாக்கத்தை கருத்தில் கொணடு இந்த இடை நிலை வணிக வாகனங்கள் பிரிவில் மேலும் 18 வகைகளை அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவை அனைத்துமே பிஎஸ்6 தரத்தை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும்.


இந்த முன்னேற்றங்கள் குறித்து மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் வாகனப் பிரிவுத் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், “கனரக வணிக வாகனங்கள் பிரிவு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில் இ்நதச் சூழலை சந்திக்கும் நோக்கில் நிலையான முறையில் புதுமைப் படைப்புகளை அறிமுகம் செய்ய வேண்டியது அவசியம் என்று நாங்கள் உணர்ந்தோம். எங்களது இந்த சிந்தனையால் உருவான ப்ளேஸோ மிகப் பெரிய வெற்றியைப் பெற்று அதன் உரிமையாளர்களுக்கு லாபகத்தைக் கொடுத்து அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனமாக பெயர் பெற்றுள்ளது. பிஎஸ் 6 தரத்தில் மிக விரிவான வகையில் பேருந்துகள் மற்றும் டிரக்குகளை வடிவமைக்கும் நடவடிக்கையில் நாங்கள் இறங்கியுள்ளோம். புதிய தொழில் நுட்பம், நுகர்வோருக்கு அதிக மதிப்பு, அதிக மைலேஜ் உத்தரவாதம் ஆகியவற்றைக் கொண்டதாக இவை அமையும்.” என்றார்.


மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா டிரக் அண்ட் பஸ் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி வினோத் சஹாய் கூறுகையில், “மைலேஜ் உத்தரவாதத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஈடு இணையில்லாத தரத்திலான தயாரிப்புகளை வழங்கும் எங்களது முயற்சி தொடர்கிறது. ப்ளேஸோ எக்ஸ் 49 கடின எம்ஏவி டிரக் ஆனது 16 சக்கர பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு அதிக சேமிப்பையும் அதிக வருமானத்தையும் கொடுப்பதுடன் அதிக மைலேஜ் மற்றும் அதிக எடை ஏற்றும் திறனைக் கொண்டுள்ளது. புதிதாக எங்களது நிறுவனம் அறிமுகம் செய்த இடை நிலை வணிக வாகனமான ஃப்யூரியோ-வுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் வரும் மாதங்களில் மேலும் 18 வகையிலான புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் இந்தப் பிரிவிலேயே முழுமையான இடத்தை வகிக்கும் நிறுவனமாக நாங்கள் உருவெடுப்போம் என நம்புகிறோம். வணிக ரீதியில் எங்களது க்ரூசியோ நீண்ட தள பேருந்தை ஊழியர்கள் மற்றும் பள்ளிப் பேருந்து பிரிவில் அறிமுகம் செய்யவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.


மஹிந்திரா நிறுவனம் வலுவான இழுவைத் திறன் கொண்ட வாகனப் பிரிவில் (haulage segment) 3-வது இடம் வகிக்கிறது (மல்டி ஆக்சில் வெகிக்கிள் மற்றும் டிராக்டர் டிரைலர்). மும்பை, டெல்லிஸ குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஹிமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், வடகிழக்குப் பிராந்தியங்கள் ஆகியவற்றில் 2020 ஆம் நிதி ஆண்டின் முதல் பாதியில் முக்கிய சந்தை இடத்தை இது பெறும்.


பெரும்பாலான புதிய இன்ஜின்கள் சிக்கலான வடிவமைப்பில் வரும் நிலையில் எம்டிபிடி, தனது வாடிக்கையாளர்களுக்கு எளிமையான முறையில் பிஎஸ் 6 அனுபவத்தை வழங்க உறுதி பூண்டுள்ளது. ப்ளேஸோ எக்ஸ், குறைவான மாற்றங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் தடையற்ற வகையில் பிஎஸ் 6 தரத்திற்கு மாற ஏதுவாகும். அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஃப்யூரியோ பிரிவில் பிஎஸ் 6 தரத்தில் 5 டன் முதல் 18 டன் வரையில் மேலும் 18 வகையிலான மாடல்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது.


காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 3, 800 கிலோ மீட்டர் நீளத்தில் வடக்கு – தெற்கு சேவை வழித்தடத்தை அமைக்கும் அறிவிப்பையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த காஷ்மீர் – கன்னியாகுமரி வழித்தடம் விற்பனைக்குப் பிந்தைய சேவையை மேலும் வலுப்படுத்தும். 100 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற வகையில்42 சேவை முனையங்கள் அமைக்கப்படும். 4 மணி நேரங்களுக்குள் சேவை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்படுகிறது. தாமதம் ஏற்பட்டால் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் 500 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். 30 சதவீத டிரக் போக்குவரத்தைக் கொண்டுள்ள டெல்லி – மும்பை வழித்தடத்திற்கு அடுத்தபடியாத இந்த காஷ்மீர் – கன்னியாகுமரி வழித்தடம் இரண்டாவது சேவை வழித்தடம் ஆகும்.


மிக விரிவான சேவை மற்றும் உதிரி பாகங்கள் விநியோகத்தின்தொடர் செயல்பாடு மூலம் வலுவான ஆதரவை வாடிக்கையாளர்களுக்கு எம்டிபி வழங்குகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட 3எஸ் (விற்பனை, சேவை, உதிரிபாகங்கள்) டீலர்ஷிப்கள், 210 அங்கீகரிக்க்பபட்ட சேவை மையங்கள், விரிவான உதிரிபாக சில்லறை விற்பனை வலைப்பின்னல், சிறப்பு உத்திகளுடன் 39 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாகங்கள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.


தற்போது 26 ஆயிரம் ப்ளேஸோடிரக்குகள் இந்திய சாலைகளில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.இந்த டிரக்குகள் இதுவரை மொத்தம் 1100 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளன. அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்புக் கட்டணம், ஆயில் மாற்றும் இடைவெளிகள் மூலம் செலவு குறைந்துள்ளது, 6 ஆண்டுகளுக்கு 6 லட்சம் கிலோமீட்டர் என்ற உத்தரவாதம் போன்றவற்றால் ப்ளேஸோ வெற்றி அடைந்தது.


மைலேஜ், சேவை, உதிரி பாகங்கள் என வாடிககையாளர்கள் அனுபவங்களில் ப்ளேஸோ மூலம் எம்டிபி முன்னோடியாகத் திகழ்கிறது.இந்தியாவில் எரிபொருள் திறன் உள்ளிட்ட 6 உத்தரவாதங்களைக் கொடுக்கும் ஒரே டிரக் மகிந்திரா ப்ளேஸோ தான்.பிரேக் டவுன் சர்வீஸ்களை 48 மணி நேரத்தில் மகிந்திரா முடித்துக் கொடுக்கிறது.தாமதம் ஏற்பட்டால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் இழப்பீடு வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.கூடுதலாக டீலர் ஒர்க் ஷாப்புகளில் 36 மணி நேரத்தில் வாகனங்கள் சர்வீஸ் செய்து கொடுக்கப்படும்.தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 3000 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.


மைலேஜ் உத்தரவாதம் என்பது எம்டிபிடி-யின் பொறியியல் சிறப்பு அம்சத்துத்துக்கான தெளிவான சான்றாகும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை இந்நிறுவனம் வழங்க விரும்புகிறது. சேவை மற்றும் உதிரிபாகங்கள் போன்றவற்றில் வலுவான கவனத்தையும் மஹிந்திரா செலுத்தி வருகிறது. சேவை முனையங்கள், உதிரி பாகங்கள் சில்லறை விற்பனை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது. தயாரிப்புகளில் புதுமை, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படும் தன்மை ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொள்வதால் தனது உத்தரவாதங்களை எம்டிபிடி செயல்படுத்த முடிகிறது. சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட ஹேஷ்டேகுகளை பயன்படுத்தலாம். #MahindraTruckAndBus, @MahindraRise, @MahindraTrukBus

மகிந்திரா டிரக் அண்ட் பஸ் டிவிஷன் ஒருங்கிணைந்த டிரக் தயாரிப்புகளை வழங்கி வருகிறது. டிரக் வடிவமைப்பில் இது அடுத்தகட்டத்துக்குச் சென்று பல்வேறு அம்சங்களுக்கு ஏற்றாறு சிறப்பு அம்சங்களுடன் டிரக்குகளை வடிவமைத்து வெவ்வேறு தொழில் துறை தேவைகளுக்கு ஏற்றவாறு டிரக்குகளை வழங்குகிறது. அதிக செயல் திறன் மிக்க வாகனங்கள், விற்பனைக்கு பின் நல்ல சேவை, விரிவுபடுத்தப்பட்ட உத்தரவாதம், உள்ளிட்ட பல சலுகைகள் மூலம் இந்திய டிரக் தொழில் துறையில் மகிந்திரா தனி முத்திரை பதித்துள்ளது.


அதிக மைலேஜ் பெறுங்கள் அல்லது டிரக்கை திரும்ப வழங்குகங்கள் என்ற தனித்துவமான சலுகைகள் மூலம் இ்நதிய வணிக வாகனங்கள் பிரிவில் புதிய முத்திரையை எம்டிபி பதித்துள்ளது. மகிந்திரா டிரக் அண்ட் பஸ் நிறுவனம் தனது விற்பனைக்குப் பிந்தைய சேவைப் பிரிவை பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. பல மொழிகளில் சேவை வழங்கும் 24 மணி நேர தொலைபேசி சேவையையும் மகிந்திரா முதல் முறையாக அறிமுகம் செய்து தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் டிரக் ஓட்டுநர்களுக்கும் உதவி வருகிறது. விரைந்த சேவைக்காக தற்போது நடமாடும் சர்வீஸ் வேன்கள் மற்றும் நடமாடும் ஒர்க் ஷாப்புகளும் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


தொடங்கப்பட்ட நாள் முதலாகவே எம்டிபி, இ்நதியாவில் டிரக் மற்றும் வணிக வாகனங்கள் துறையை மறு வரையறை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு மிகச் சிறந்த பிராண்ட் ஆகத் திகழ்ந்து வருகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் எம்டிபி-க்கு பல்வேறு அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது.


மேலும் விவரங்களுக்கு என்ற www.mahindra.com www.mahindratruckandbus.com, www.mahindralcv.com, www.mahindra.com என்ற இணைய தளங்களைக் காணலாம்.


#Mahindra #BLAZO #Introducing #Truck #Larry