IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அப்போ கிரிக்கெட் இல்லையா..? தோனியின் முடிவு குறித்து பிசிசிஐ

3


2019 உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினர் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் பிசிசிஐ தற்போது புதிய தகவலை தெரிவித்துள்ளது.


உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியுற்று வெளியேறியது. இதையடுத்து இந்தியா அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் விளையாட உள்ளன. இதற்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்த நிலையில், தோனியின் எதிர்கால திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் தோனி தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் துணை ராணுவப்படை வீரர்களுடன் சேர்ந்து சேவை செய்ய விரும்புவதாக தோனி பிசிசிஐ-யிடம் தெரிவித்தார்.


தோனியின் இந்த முடிவை ஏற்ற பிசிசிஐ , அவர் வருகின்ற ஜுலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 வரை காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மகேந்திர சிங் தோனி பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார்.