IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மீண்டும் டி.20ல் மகேந்திரசிங் தோனி

Get real time updates directly on you device, subscribe now.

 

சமீபகாலமாக எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங்டோனி வரும் டி.20 உலக கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வெற்றிகரமான பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவரும், இந்தியாவுக்கு டி.20 உலகக்கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை பெற்று தந்தவருமான மகேந்திரசிங் டோனி (38) டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்ற போதிலும் ஒரு நாள் மற்றும் டி.20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடுவதாக அறிவித்திருந்தார்.

இருப்பினும் கடைசியாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலககோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியவர், அதன் பிறகு எவ்வித போட்டிகளிலும் விளையாடவில்லை.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிக்கு சென்னை அணியை வழிநடத்தும் டோனி, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை டி.20 கிரிக்கெட் போட்டியில் தோனி விளையாட வாய்ப்பு இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடைசி கட்ட ஓவர் வரை கிரிக்கெட்டை ரசிக்க வைத்த தோனி மீண்டும் இந்திய அணிக்காக, அதுவும் உலக கோப்பை போட்டியில் ஆட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்கள் அவர்களது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் அனுபவம், பினிசிங் திறன் நிச்சயம் கேப்டன் கோலிக்கு நிச்சயம் உதவும் என்கின்றனர் டோனியின் ரசிகர்கள்.

#MahendraSinghDhoni #again #T20 #Cricket #match

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader