IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த பரபரப்பு – தொடர் ராஜினாமா!!

Get real time updates directly on you device, subscribe now.


மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டு வந்த தொடர் குழப்பங்களால் பாஜகவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிர பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக அரசிற்கு ஆதரவு தெரிவித்து வந்த அஜித் பவார் ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், தொடர்ந்து ஆதரவளிக்க முடியாது என துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தானும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார்.

மேலும் மகாராஷ்டிரா மக்கள் பாஜக – சிவசேனா கூட்டணிக்குத்தான் வாக்களித்ததாகவும், சிசவசேனாவை விட பாஜக அதிக இடங்களில் கைப்பற்றியுள்ளது என்றும் தெரிவித்தார். சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என பாஜக உறுதியளிக்கவில்லை என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். பாஜக விற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தான் முதல்வர் பதவி கேட்டு சிவசேனா மிரட்டத் தொடங்கியது என கூறினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader