மகாராஷ்டிராவிலும் பாஜக ஆதிக்கம் – என்.சி.பியுடன் சேர்ந்து ஆட்சியமைத்த பாஜக

Get real time updates directly on you device, subscribe now.

காங்கிரஸ் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிராவில் விரைவில் ஆட்சி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று இரவில் கூட மூன்று கட்சிகளின் அரசியல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்படி பேட்டியளித்த சரத் பவார் பேச்சுவார்த்தை அனைத்தும் சுமூகமாக முடிவடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் விரைவில் ஆட்சி அமைக்கப்படும். உத்தவ் தாக்கரே ஐந்து ஆண்டுகளுக்கும் முதல்வராக பதவியில் இருப்பார் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரசும் (என்சிபி), பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக தேவேந்திர பட்னாவும், துணை முதல்வராக சரத்பவார் மகன் அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த திடீர் கூட்டணி அமைவால் சிவசேனா கட்சிக்கும் காங்கிரசுக்கும் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. ஆனால் கூட்டணி முடிவில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு என்றும் தேசியவாத காங்கிரஸ் பாஜவிற்கு ஆதரவு அளிக்கவில்லை என சரத்பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் இவர்களின் பதவியேற்பால் மகாராஷ்டிராவில் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
#MaharashtraPolitics #Devendrafadnavis #AmitShah #ajitpawar #MaharashtraGovtFormation #SharadPawar #IN4NET

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader