IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்

145

தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய தெப்பக்குளமானது மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று மீனாட்சி சொக்கநாதர் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள் பாலிப்பது வழக்கம்.

பருவமழை பொய்த்ததன் காரணமாக கடந்த சில வருடங்களாகவே நீரின்றி இறங்கி எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் இந்த வருடம் நீர் நிறைந்த தெப்பக்குளத்தில் எழுந்தருளும் வண்ணமாக வைகை அணையிலிருந்து தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

பனையூர் கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைகைக் கரையில் தென்பகுதியில் இருந்து கால்வாய் மூலமாக வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு நீர் நிரப்பும் பணியானது தற்போது துவங்கியுள்ளது.

இந்தப்பணியினை பொதுப்பணித்துறை மற்றும் மதுரை மாநகராட்சியின் மூலமாக இந்த பணிகளானது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது