IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வைகை ஆற்றில் சிக்கிய சிறுவன் இன்று பிணமாக மீட்பு

Get real time updates directly on you device, subscribe now.


மதுரை வைகையாற்றில் சிக்கிய சிறுவன் இன்று காலை ஆரப்பாளையம் வைகையாற்று பாலத்துக்கு அடியில் பிணமாக மீட்கப்பட்டனர்.

வடமேற்கு மருவமழை தொடங்கியதிலிருந்து எல்லா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து வைகை அணையில் நீர் நிரம்பியுள்ளதால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் மதுரை பெத்தானியாபுரம் வைகை ஆற்றுப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் குமார் மகன் பாலமுருகன் 11வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கியுள்ளான். சிறிது நேரத்தில் வைகையாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப் பட்டது.

அதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மதுரை திடீர் நகர் தீயணைப்புத் துறையினர் மற்றும் தல்லாகுளம் தீயனைப்பு துறையினர் இரவு வரை தேடினர். சிறுவன் கிடைக்காத நிலையில் இன்று காலை ஆரப்பாளையம் வைகையற்று பாலத்துக்கு அடியில் பிணமாக மீட்கப்பட்டான். உடலை பார்த்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

உடலை கைப்பற்றிய தீயணைப்பு துறையினர் ராஜாஜி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader