மதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான ஆடைகள் நாசம்

Get real time updates directly on you device, subscribe now.

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெற்கு வட்டம், மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள தெற்கு மாசி வீதியில் ஜவுளிக்கடைகள் ஏராளமாக உள்ளன. இந்தப்பகுதியில் தீபாவளி முதல் தொடர்ந்து ஒரே பகுதியில் மூன்று இடங்களில், தெற்குமாசி வீதி பகுதியில் 3 இடங்களில் தீ பிடித்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தீ விபத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தெற்கு மாசி வீதியில் பைசர் அகமது என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் அதிகாலை 4 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தற்போதுவரை தீயணைப்பு படையினர் 50க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தண்ணீர் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதிகாலை 4 மணிக்கு பிடித்த தீ விபத்து 3 மணி நேரத்திற்கு மேலாக எரிந்து கொண்டிருக்கிறது.

தரைதளத்தில் ஜவுளிக்கடை மற்றும் மேல் மூன்று தளங்களில் ஜவுளி குடோன் என இருந்த 3 மாடி ஜவுளிக்கடை ஜவுளிக் கடை குடோனில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல லட்சம் மதிப்பிலான ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகின.

தெற்குமாசி வீதியில் ஜவுளிக்கடைகள் நெருக்கடி மிகுந்த கட்டிடங்களில் இருப்பதால் ஜவுளிக்கடைகள் விதிகளை மீறி வைக்கப்பட்டிருக்கிறது என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை விளக்குத் தூண் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்ந்து மூன்று தீ விபத்துகள் நடந்திருப்பதால் முதல் தீ விபத்து நடந்த உடனேயே மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதா என விசாரித்து விதிகளை மீறி கட்டப்பட்டிருந்த கட்டிடங்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More