IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை

0 157

மதுரை அருகே காயத்துடன் போராடிய நல்ல பாம்பு ஒன்றிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காயம் சரியானதுடன் அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் நேற்று ஒரு நல்ல பாம்பு காயத்துடன் ஊர்ந்து செல்ல முடியாமல் கீழே கிடந்தது. அதன் உடலில் பல காயங்கள் இருந்ததால் உயிருக்கு போராடியது. இதனைக் கண்ட குடியிருப்பு மக்கள் திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் இதனையடுத்து அதன் பொறுப்பாளர்கள் அந்த இடத்திற்கு சென்று பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்பு அந்த பாம்பை ஒரு பையில் போட்டுக் கொண்டு மதுரை தல்லாகுளத்தில் உள்ள பன்நோக்கு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து டாக்டர் பார்த்திபன் தலைமையில் அந்த பாம்பை பரிசோதித்தனர். உடனடியாக அதற்கு முதலுதவியும் அளிக்கப்பட்டது.

அந்த பாம்பை காப்பாற்ற வேண்டுமெனில் உடனடியாக அதற்கு காயம்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அந்த பாம்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 2 மணிநேரம் இந்த சிகிச்சை நடந்தது. இதற்காக அந்த பாம்புக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. காயம்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டு கட்டப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய அந்த பாம்பு நன்றாக ஊர்ந்து செல்கிறதா ? என பரிசோதிக்கப்பட்டது. மேலும் சிகிச்சைக்கு பிறகு ஆட்களைப் பார்த்ததும் பாம்பு சீறியது. அது ததனது இயல்பான குணத்தை வெளிப்படுத்தியதை உறுதி செய்த கால்நடை மருத்துவர்கள் அந்த பாம்பை மீண்டும் ஊர்வனம் அமைப்பிடம் கொடுத்தனர்.

அந்த பாம்பை மீட்டு, மதுரை சரக வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகள், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் அந்த நல்லபாம்பை விட்டனர். பாம்பிற்காக மேற்கொண்ட முயற்சிகளை கண்ட பொதுமக்கள் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறை அதிகாரிகளை வெகுவாக பாராட்டினர்.