IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் 500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – செல்லூர் ராஜு

Get real time updates directly on you device, subscribe now.

உணவின்றி வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மின்சாரத் துறையின் மூலமாக ஒரு திட்டத்தை அறிவித்திருந்தார். அந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறோம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டங்களையும் நிறைவேற்ற மாட்டார். என்பதை நான் உறுதிபடச் சொல்கிறேன். கடுகளவு கூட விவசாயிகளுக்கு எந்தவித கெடுதலும் வராது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை விட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் மீது ஆயிரம் மடங்கு அக்கறை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை, விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் வராது.

மக்கள் சமூக இடைவெளி விட்டு சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. கொரோனா வைரஸை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்பதில் நான் உறுதிப்பட இருக்கிறேன். அம்மை போன்ற பல்வேறு நோய்களை விரட்டி அடித்தவர்கள் நம் முன்னோர்கள் என செல்லூர் ராஜு பேசினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader