IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்

Get real time updates directly on you device, subscribe now.

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தோறும் மான் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 31ஆம் தேதி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய போது, ‘கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து உருக்கமாக பேசினார்.

அந்த உரையில், கொரோனா ஊடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவியவர்களையும் குறிப்பிட்டு பேசினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற மக்கள் தங்களுடைய சொந்த சேமிப்பைக் கொண்டு ஏராளமான மக்களுக்கு உதவியுள்ளனர் என குறிப்பிட்டார்.

அதில் மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் அவரது மகளின் படிப்புச் செலவுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்து சேர்த்துவைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு செலவிட்டு உதவி செய்துள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள் என்றார்.

இதனையடுத்து மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகனுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது மகள் நேத்ராவின் கல்விக்கு உதவிகளும் குவிந்து வந்தன.

இந்நிலையில் நேத்ராவை ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான (United Nations Association for Development and Peace) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடைய எதிர்காலத்திற்காக சுமார் ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader