IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொள்ளையர்களை ஓட ஓட விரட்டியது எப்படி? உயிர்தப்பிய காவலாளி உருக்கம்!

11


கூட்டுறவு வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றவர்களை விரட்டியபோது வங்கிக் காவலாளிக்கு வெட்டு விழுந்தது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்துள்ளனர்.


மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது. அதில் அதே ஊரை சேர்ந்த வெள்ளையன் (வயது 55) இரவு நேர காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் மழை பெய்தது. அப்போது அங்கு மின்தடை ஏற்பட்டது. இருட்டாக இருந்ததால் வெள்ளையனுடன் அவரது உறவினர் சண்முகம் (வயது 27) துணைக்கு உடன் இருந்துள்ளார்.


வங்கி வாசல் அருகே வெள்ளையன், சண்முகம் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளையனும், சண்முகமும் வங்கிக்குப் பின்புறம் சென்று பார்த்தனர். அப்போது ஒரு கும்பல் வங்கியின் பின்புற ஜன்னலை உடைத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் வெள்ளையனும், சண்முகமும் அவர்களை தடுக்க முயன்றுள்ளனர்.


அப்போது அவர்களை கொள்ளையர்கள் அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். அதன் பிறகு சத்தம் கேட்டு ஓடி வந்த ஊர்மக்கள் இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொள்ளையடித்த பொருட்களை வைத்து கடை விரித்த பலே கொள்ளையர்கள்


மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். காவலாளி வெள்ளையன் மற்றும் சண்முகத்திடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் கொள்ளையர்களை விரட்டியது குறித்து உருக்கமாக கூறினர்.


கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை தேடி வருகின்றனர். வெள்ளையனும், சண்முகமும் உயிரை பொருட்படுத்தாமல் கொள்ளையர்களை விரட்டி ரூ.2 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை காப்பாற்றியுள்ளனர். இதனால் அவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

#robbery #bank #watchman #madurai #theft