இராஜாஜி பூங்கா

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையிலிருந்து ஏறத்தாழ 3கி.மீ தொலைவிலும், கோரிப்பாளையத்தில் இருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய பூங்காதான் இராஜாஜி பூங்கா ஆகும்.

சிறப்புகள் :

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குடும்பங்களுடன் பொழுதுபோக்கை களிக்கும் இடமாக ராஜாஜி பூங்கா திகழ்கிறது.

* இங்கு குழந்தைகள் அங்கும்… இங்கும்… ஆடிப்பாடி விளையாடுவதற்கு ஊஞ்சல்கள், சறுக்குகள், பெரிய ராட்டினங்கள் என்று உற்சாகம் மூட்டும் விளையாட்டுகள் பல அமைந்துள்ளன.

* மேலும் சிறு குழந்தைகள் விளையாடுவதற்கு வாத்து, தவளை, டிராகன், மூன் ரோலர் போன்ற சிறு வகை ராட்டினங்களும் இந்த பூங்காவில் அமைந்துள்ளன.

* இந்த பூங்காவில் பரவசமூட்டும் விளையாட்டுகளான குடும்பத்துடன் பயணிக்கும் ரயிலும், சிறுவர்கள் என்று ஸ்நேக் ரயில் ஆகியவையும் உள்ளன.

* ராஜாஜி பூங்காவை அழகுச் சேர்க்கும் விதத்தில் மீன் அருட்காட்சியகம் ஒன்று பூங்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. அதில் நம் கண்களை கவரும் வகையில் அழகிய வண்ணமயமான மீன்களும், அவை பார்ப்பதற்கு வித்தியாசமான விதத்தில் அமைந்திருக்கும்.

* நம் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் புறாக்கள், லவ் பேர்ட்ஸ், கோழிகள், வாத்துகள், முயல் போன்றவைகளையும் கண்டு ரசிக்கலாம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More