IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரசிற்கு தனி ஐசோலெசன்

110


கொரோனா வைரஸ் பாதிப்போடு சீனாவில் இருந்து 40 இற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கேரளா வந்துள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்ற அடிப்படையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் மதுரை மாநகர் போன்ற பெரு நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஏதேனும் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்ற அடிப்படையில் தொடர் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

Related Posts
1 of 76


இதனையடுத்து இன்று கொரோணா வைரஸ் பாதிப்புக் கென 8 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஏதேனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் உடனடியாக அவர்களுக்கு முழுமையான உடல் பரிசோதனை செய்து இந்த சிறப்புப் பிரிவில் வைத்து அவர்களுக்கு முழுமையாக சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.