IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் நைபர் நிச்சயம் அமையும் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Get real time updates directly on you device, subscribe now.


மத்திய அரசு அறிவித்த நைபர் நிச்சயம் மதுரையில் அமையும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் ரூ.1100 கோடி மதிப்பில் நைபர் (தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்) அமைக்கப்படும் என மத்திய அரசு 2011ல் அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆமதாபாத், ஹாஜிபூரி, கவுகாத்தி, லக்னோ, கொல்கத்தா போன்ற இடங்களுக்கு நைபர் அறிவிக்கப்பட்டுள்ளது. நைபரில் எம்.பார்ம்., மருத்துவ வேதியியல், இயற்கை மருந்து, மருந்தியல் கூராய்வு, மருந்தியல் ஆராய்ச்சி படிப்பு, நச்சு இயல், உயிரி தொழில்நுட்பவியல் உள்பட 15ற்கும் மேற்பட்ட மருத்துவ படிப்புகள் ஏற்படுத்தப்படும்.

ஆனால் மதுரையை தவிர மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட நைபர் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் மதுரை திருமோகூர் அருகே 116 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு மத்திய அரசிடம் ஒப்படைத்ததோடு சரி, வேறு எந்த வேலையும் நடைபெறவில்லை. 8 ஆண்டுகள் ஆகியும் நைபர் மதுரைக்கு எட்டாத கனியாக இருந்துள்ளது. இந்நிலையில் மதுரையில் விரைவில் நைபர் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். அதற்காக மத்திய அரசிடம் பேசுவோம் என விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More