IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் குடும்பத்தினருடன் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஒரு அரிய வாய்ப்பு!

Get real time updates directly on you device, subscribe now.

தூங்கா நகரமாம் மதுரை மாநகரில் முதன்முறையாக குடும்பத்துடன் புத்தாண்டு 2020யை கொண்டாட சுற்றுலா துறை மற்றும் விசாகா மீடியா சிறந்த வாய்ப்பு அளித்துள்ளது.


தமிழ்நாடு சுற்றுலா துறையினருடன் இணைந்து புத்தாண்டு குடும்ப விழா 2020 தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதில் இசை நிகழ்ச்சிகள் ஏராளம், சிறப்பு அம்சங்கள் மற்றும் பரிசுகள் தாராளம்.


காதிற்கு விருந்தளிக்க விழாவின் சிறப்பு அழைப்பாளர் பிரபல பாடகி மால்குடி சுபா அவர்களுடன் பிரபல சென்னை இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி குழுவினர் இணைந்து நடத்தும் இன்னிசை கச்சேரி நடைபெறுகின்றது. மேலும் கண்ணிற்கு விருந்தளிக்க குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு போட்டிகள் மற்றும் மேஜிக் ஷோ நிகழ்ச்சிகளும் உண்டு. டிஜிட்டல் மீடியா பார்ட்னராக In4net இணைந்துள்ளது.


நாவிற்கு சுவை அளிக்க 30-க்கும் மேற்பட்ட சைவ / அசைவ உணவு வகைகளுடன் கூடிய இரவு விருந்தையும் உண்டு மகிழலாம்.


குடும்பத்துடன் வாருங்கள் குதூகலமாய் 2020- ஆம் ஆண்டை வரவேற்போம். எல்லோருடையவாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

#Madurai #NewYear #Celebration #Tamilnadu #Hotel

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader