IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தாய் இல்லா பிள்ளைகள் நாங்கள்: அமைச்சர் உதயகுமார் உருக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

 

தாய் இல்லாத பிள்ளைகளான எங்களை மக்களான நீங்கள் தாயாய் இருந்து காப்பாற்றுங்கள் என அமைச்சர் உதயகுமார் உருக்கமாக பேசினார்.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக மக்களை சந்திப்பவர்கள் அல்ல. லோக்சபா தேர்தலில் கடன்களை தள்ளுபடி செய்வோம் என குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. மக்களிடம் செம்பை கொடுத்து அண்டாவை தூக்கி செல்பவர்கள் தான் தி.மு.க.வினர்.

தேர்தல் பொதுக்கூட்டங்கள், சட்டசபையில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் பழனிசாமி நிறைவேற்றியுள்ளார். தாய் இல்லாத பிள்ளையாக இருக்கும் எங்களுக்கு, நீங்கள் (மக்கள்) தாயாய் இருந்து காப்பாற்ற வேண்டும். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். நடைபெறவுள்ள நகராட்சி பேரூராட்சி தேர்தல்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

 

#madurai #Minister #Udayakumar #speech

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader