முப்பெரும் தேவி – மதுரை

Get real time updates directly on you device, subscribe now.

நாட்டார் தெய்வங்கள் மலையாளத்து தேசத்திலிருந்து வந்தது என்று சொல்லும் வழக்கு நம் மண்ணில் உண்டு. முப்பெரும் தேவிக்கும் அப்படி ஒரு கதை உண்டு.

 

தமிழர்கள் நீரை தெய்வமாக வழிபடும் மரபை கொண்டவர்கள். நீர்மாலை எடுப்பது, நீர்கரகம் எடுப்பது, தீர்த்தவாரியில் நீராடுவது, முளைப்பாரி கரைப்பது, பூசையறையில் ஒரு குவளை நீரில் பூப்போட்டு வைப்பது என தமிழர்கள் நீரை வணங்கும் மரபையுடையவர்கள்.

 

தமிழகத்தில் பெரும்பாண்ம வழிபாடு அம்மன் வழிபாடுதான். அம்மன் வழிபாடு இல்லாத ஊர்களே தமிழகத்தில் இல்லை எனலாம். மாரியம்மன் என்பதே மழை தெய்வம்தான். மாரியம்மன் ஏதேனும் ஒரு தெப்பம், கண்மாய், ஏரி உள்ளிட நீர்நிலைகளுக்கு அருகில்தான் வீற்றிருக்கும்.

 

ஆகம கோவில்கள் கிழக்கு திசை பார்த்து அமைந்திருக்கும். ஆனால் அம்மன் சிலைகள் வடக்கு பார்த்து வீற்றிருக்கும். காரணம் முன்று பக்கமும் கடல் சூழ்ந்த தமிழகத்திற்கு எதிரிகள் வடக்கு திசையிலிருந்தே வர முடியும்.

 

எனவே வடக்கிலிருந்து வரும் ஆபத்திலிருந்து தன் மக்களை காக்க அம்மன் சிலைகள் வடக்கு பார்த்து அமர்ந்திருக்கின்றன. தமிழ்சமூகம் தாய்வழி சமூகம் என்பதற்கான சான்றுகள் இவை.

 

நீரை தெய்வமாக வழிபடும் தமிழர்களுக்கு நீர் மேற்கிலிருந்துதான் வருகிறது. தமிழகத்தின் அனைத்து ஆறுகளும் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்துதான் தமிழகத்திற்கு வருகிறது. மேற்கே மலையாள தேசமுள்ளது. எனவே தங்கள் தெய்வம் (நீர்) மலையாள தேசத்திலிருந்து வந்தது என்று தமிழர்கள் சொல்லுகிறார்கள் என்று பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப. கூறுகிறார்.

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader