IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டுக்குப் பதிலாக புட்டு வழங்கலாமா?

Get real time updates directly on you device, subscribe now.


மதுரைக்கு புகழ் சேர்த்த பிட்டுவை ஒதுக்கி வட இந்திய இனிப்பான லட்டுவை மீனாட்சியம்மன் கோவில் பிரசாதமாக கொடுப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.


உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினர் முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவர்களும் மீனாட்சி சொக்கநாதரை தரிசித்து செல்கின்றனர்.


இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கும் லட்டுவை மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வருகின்ற 2019 தீபாவளி முதல் லட்டுவை இலவச பிரசாதமாக கொடுக்கலாம் என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மீனாட்சியம்மன் கோவில் பிரசாதமாக லட்டுவிற்கு பதில் பிட்டுவை கொடுக்கலாம் என ஆலோசித்து வருகின்றனர்.


மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்துதான் திருவிளையாடல் நடத்தினார் சிவபெருமான். எனவே பிட்டு (புட்டு) பிரசாதமாக தருவதுதான் மதுரையின் சிறப்பாக அமையும். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வட இந்திய இனிப்பான லட்டுவை பிரசாதமாக கொடுப்பது முறையல்லவா அல்லது முரண்பாடானது அல்லவா..?

திருப்பதி லட்டுக்கும் மதுரை லட்டுக்கும் இதுதாங்க வித்தியாசம்
மற்றும் பிட்டு என்பது வெளிநாட்டினரும் வியக்கும் இட்லியை போன்று ஆவியில் வேக வைக்கக் கூடியதாகும். உடல் செரிமானத்திற்கு மிகவும் நல்லதாகும்.


தமிழக கோவில்களில் பிரசாதத்திற்குபெயர்போன பழநி பஞ்சாமிர்தம், காஞ்சி இட்லி போல வருங்காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பிட்டு தனி சிறப்பையும் பெறலாம். ஏன் புவிசார் குறியீடு கூட கிடைக்கலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில் பல்வேறு சிறப்பு விஷயங்களில் முன்மாதிரியாக திகழ்வதால் கோவில் பிரசாத விஷயத்தில் மட்டும் திருப்பதி கோவில் லட்டுவை பின்பற்ற வேண்டாமே!


ஏற்கனவே திருப்பதி கோவில் லட்டுவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துவிட்டது. தற்போது மீண்டும் அதே லட்டுவை மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிரசாதமாக கொடுத்தால் அதே லட்டுவிற்கு மீண்டும் புவிசார் குறியீடும் கிடைக்காது. மதுரைக்கு புகழ் சேர்த்த சிவபெருமானின் பிட்டுவையையும் உலகறியச் செய்யாமல் தடைசெய்வது போல் அமைந்துவிடும். எனவே இதை அனைவரும் யோசிக்க வேண்டும்.


பிட்டு #பிரசாதம் #பிட்டுபிரசாதம் #லட்டு #மதுரை #மீனாட்சி #சுந்தரேசுவரர் #திருப்பதி #மீனாட்சியம்மன் #madurai #Meenakshi #MeenakshiTemple #Pittu #Lattu #Thirupathy

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader