IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்

0 83


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் உலக புகழ் பெற்றது இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதில் சித்திரைத் திருவிழாவும் ஆவணி மூலத் திருவிழாவில் பிரசித்தி பெற்றது. மேலும் கோவிலில் தரிசனம் செய்வதற்கு வெளியூர்களில் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள்.


திருவிழா காலங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள். திருப்பதி கோவிலைப் போல் மீனாட்சி அம்மன் கோவிலிலும் அக்டோபர் 27தீபாவளி முதல் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.மேலும்


தெற்கு ஆடி வீதியில் உள்ள அறையில் லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் மணிக்கு 3 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கலாம் லட்டு தயாரிக்கும் பணியில் 11 பேர் ஈடுபட்டுள்ளனர் சுவாமி சன்னதி முன்பாக லட்டு வழங்கும் பணிகள் இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்தருக்கு 30 கிராம் லட்டு வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையாளர் நடராஜன் கலந்து கொண்டு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கினர்.


#Madurai #Meenakshi #Amman #Temple #laddu