IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் உண்டியல் வசூல் எண்ணிக்கை ஆரம்பம்

159

மதுரையில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தக்கூடிய உண்டியல் பணம் மற்றும் உப கோவில்களில் பக்தர்கள் வழங்கக்கூடிய காணிக்கை பணம் மாசம் தோறும் கோயில் வளாகத்தில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணப்படுவது வழக்கம்

அந்த வகையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணமானது இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் பல்வேறு பக்தர் சபைகளை சேர்ந்தவர்களும் வங்கிகளில் பணியாற்றிய முன்னாள் அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் நோட்டுகள் சில்லரை நாணயங்கள் தங்கம் வெள்ளி பொருட்கள் உட்பட வெளிநாட்டு பணங்களும் எண்ணப்பட்டு வருகின்றன.

பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வசூலின் எண்ணிக்கையை இன்று மாலை கோவில் நிர்வாகம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.