IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த குழந்தை கொலை: நாடகமாடிய தாய் கைது

77

 

மதுரையில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த 5 வயது குழந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கும் ஆனந்த ஜோதி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜீவா(5), லாவண்யா(3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் ஜீவா வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளான். அந்த சமயத்தில் ஆனந்தஜோதி வீட்டில் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த ராம்குமார், மனைவி ஆனந்த ஜோதியிடம் இது பற்றி கேட்டுள்ளார் .ஆனால் அவரோ மதியம் சிறுவனை தூங்க வைத்து விட்டு வெளியில் சென்று விட்டதாகவும், எப்படி உயிரிழந்தான் என தெரியாது எனவும் கூறியுள்ளார். இருப்பினும் அவரது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இது பற்றி ராம்குமார் போலீசில்; புகார் தெரிவித்துள்ளார்.

.இதையடுத்து சந்கேத்தின் பேரில் ஆனந்த ஜோதியை பிடித்து போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.  ஆனந்தஜோதிக்கும், அவரது கணவரின் உறவினரான மருதுபாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. நீண்ட நாட்களாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

சம்பவத்தன்றும் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ஜீவா பார்த்துள்ளான்.
இது பற்றி தனது கணவரின் ஜீவா சொல்லி விடுவான் என பயந்து போன, ஆனந்த ஜோதி, பெற்ற குழந்தை என்று பார்க்காமல் ஈவு, இரக்கம் இன்றி கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி கள்ளகாதலனுடன் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஜீவாவின் வாயை பொத்தி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பின் எதுவும் தெரியாதது போல கணவரிடம் உறவினர்களிடமும் நாடகமாடியுள்ளார். இத்தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஆனந்த ஜோதி மற்றும் கள்ளக்காதலன் மருதுபாண்டி ஆகியோர் மீது கொலை வழக்குபதிந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

#Madurai #love #issue #son #murder