IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை காவலன் செயலியில் 3 புதிய அம்சங்கள் சேர்ப்பு

35


மதுரை காவலன் செயலி கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது மேலும் 3 புதிய அமசங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.


மதுரை மாவட்டத்தில் உள்ள பூட்டிய வீடுகளை கண்காணிப்பதற்காக மதுரை மாவட்ட காவல் துறை சார்பில், மதுரை காவலன் என்ற செயலி அறிமுகபடுத்தபட்டது. இந்த செயலியை கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிமுகப்படுத்தினார்.

இந்த செயலியில் அந்தந்த காலத்திற்கு ஏற்ப பல்வேறு சிறப்பு அம்சங்களை சேர்த்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மேலும் 3 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மதுரை காவலன் செயலி குறித்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நிருபர்களிடம் பேசுகையில், மதுரை மாவட்ட மக்களுக்கு பெரிதும் பலன் அளிக்கும் வகையில் மதுரை காவலன் என்ற செயலி இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தபட்டது.

இந்த செயலியை இது வரை 34 ஆயிரத்து 590 பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் தினமும் 2 அல்லது 3 புகார்கள் வருகின்றன. அதன் அடிப்படையில் இது வரையில் 143 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மதுரையில் நடக்கும் திருவிழாக்களின் போது மதுரை மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.


தற்போது செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ கண்டறிதல் மற்றும் வாகனத்தைக் கண்டுபிடித்தல் ஆகிய புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் செல்போன் அல்லது வாகனங்கள் வாங்கும் பொழுது அவை திருட்டு வழக்கில் தொடர்புடையதா என்பதை கண்டறிய முடியும்.

ஒருவேளை அந்த வாகனம் அல்லது செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடையதாக இருந்தால், அந்த எண்கள் அதில் தோன்றும். இந்த செயலியை அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் ஒலிமொழி மூலம் செயலியை பயன்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை வரலாற்றில் முதன் முறையாக இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது.


பொது மக்கள் பிளே ஸ்டோரில் மதுரை காவலன் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே வைத்திருப்பவர்கள் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும், என அவர் கூறினார்.