IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு வழிகாட்ட மதுரை கமலம் குழுமம் புதிய முயற்சி!

Get real time updates directly on you device, subscribe now.

ஆர்வமுள்ள இளைஞர்கள், இல்லத்தரசிகள் 8220449911 என்ற எண்ணிற்கு தங்களைப் பற்றிய விபரங்களை அனுப்பலாம்

மதுரையைச் சேர்ந்த கமலம் குழுமம், தமிழகத்தில் சொந்த தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஆக்கப்பூர்வமான புதிய முயற்சியில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.

கமலம் குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்ரீமதி சாம்பிராணி மற்றும் அகர்பத்திகள் நிறுவனத்தின் விளம்பரம் சமீபத்தில் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியானது. பாரம்பரிய சாம்பிராணியின் மருத்துவ குணம், முன்னோர்கள் சாம்பிராணியை வைரஸ் போன்ற கிருமி நாசினியாக பயன்படுத்தியது உள்ளிட்ட பயனுள்ள தகவல்களுடன் வெளியான விளம்பரத்தில், ”தமிழகம் முழுவதும் ஸ்ரீமதி சாம்பிராணி மற்றும் அகர்பத்தியை விநியோகிக்க விநியோகஸ்தர்கள் தேவை” என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.

ஒரு திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்த விளம்பரக் காட்சி முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. விளம்பரப்படத்தில் நடித்த பிரபல சினிமா இயக்குனர் எஸ்பிஎஸ் குகனையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஸ்ரீமதி சாம்பிராணி விளம்பரத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.கே.முத்து கூறுகையில், எங்களது விளம்பரத்தைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் போனில் தொடர்பு கொண்டு டீலர்ஷிப் குறித்த விபரம் கேட்டறிந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் வணிகத்திற்கு புதியவர்கள் என்பது வரவேற்கத்தக்க உண்மை. இந்த கொரோனா காலத்தில் பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது ஸ்ரீமதி சாம்பிராணி நிறுவனம் ஏற்கனவே புதியவர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்து, பலரை தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது. இப்போதும் அதிக அளவிலான படித்த இளைஞர்கள், குடும்ப பெண்கள் ஸ்ரீமதியின் டீலர் ஆவதற்கு முன்வந்துள்ளனர், என்றார்.

இளைஞர்கள் மத்தியில் சொந்த தொழில் ஆர்வம் அதிகரித்திருப்பது பற்றி மேலும் கூறிய ஜே.கே.முத்து, இளைஞர்களின் முயற்சியை வரவேற்பதுடன், அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுப்பதை எமது கமலம் குழுமத்தின் கடமையாக கருதுகிறேன். அதனால் கொரோனா காலத்தால் தொழில், வேலை பாதிப்படைந்து புதிய வருமானத்தையும், அதற்கான திட்டத்தையும் நோக்கி படையெடுப்பவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ”ஸ்மார்ட் ஓனர்” என்ற முன்முயற்சியை தொடங்கியுள்ளோம்.

குறைந்த முதலீட்டில் உள்ளூரிலேயே சொந்த தொழில் தொடங்கி வெற்றி பெறுவதற்கான திட்டம் இது. இதற்காக ஆர்வமுள்ள இளைஞர்கள், குடும்ப தலைவிகளுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு, சான்றிதழ், தொழில் ஆலோசனை உள்ளிட்டவைகளையும் செய்யவிருக்கிறோம், என்றார்.

“ஸ்மார்ட் ஓனர்” ஆக விரும்பும் இளைஞர்கள், இல்லத்தரசிகள் 8220449911 என்ற எண்ணிற்கு தங்களைப் பற்றிய விபரங்களை அனுப்பலாம் என்று கமலம் குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader