மதுரைக்கு வந்தாச்சு MIOFT சினிமா பயிற்சி மையம்! திரை ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதம்!!

Get real time updates directly on you device, subscribe now.

“சினிமா பயிற்சி மையத்தில் சேர விரும்புவோர் 9788399159, 8838138985 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்”

சினிமா துறையில் சாதிக்கத் துடிக்கும் திரை ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதமாக மதுரையில் முற்றிலும் புதுமையான பாடத்திட்டங்களுடன் சினிமா இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் டெக்னாலஜி (MIOFT) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தில் திரைத்துறையின் ஜாம்பவான்கள் இணைந்து வகுப்பெடுக்க உள்ளனர்.

சினிமா என்ற மூன்றெழுத்து மோகனச் சொல் பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்த பலரும் சினிமா துறையில் கால்பதிக்க வேண்டுமென்ற லட்சியத்தோடு சென்னைக்குச் சென்று, பல்வேறு இன்னல்களைக் கடந்து சாதித்தவர்கள் ஏராளம். அதேப்போல இந்த கவர்ச்சிப் பட்டறைக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்காமல் காத்திருப்போரின் பட்டியலும் அன்று முதல் இன்று வரை நீண்டு கொண்டே போகிறது.

முன்பெல்லாம் சினிமா துறையில் நுழைய முதலில் அஸிஸ்டெண்ட்டாக வேலை பார்க்க வேண்டி இருந்தது. அனுபவக் கல்வியை வைத்து ஜெயித்தவர்கள் பட்டியல் அதிகம். இன்று அந்த நிலை சற்றே மாறத் தொடங்கியிருக்கிறது. அதற்கு காரணம் சினிமாவைக் கற்றுக் கொடுக்கும் பல்வேறு பயிற்சி மையங்கள்தான். திரைத்துறை ஜாம்பவான்கள், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார்கள். அந்த பயிற்சி மையங்களில் பயின்ற பலரும் வாய்ப்புக்காக ஏங்கி கோடம்பாக்கத்தை வலம் வந்து கொண்டிருப்பது ஒரு வேதனை என்றால்… பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்குப் படையெடுத்து உண்ண உணவின்றி, தங்க இடமின்றி தவிக்கும் பட்டியல் இன்னொருபுறம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் மதுரையில், மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் டெக்னாலஜி (MIOFT) என்ற பயிற்சி மையம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை கமலம் குழுமம், டைரக்டர் எஸ்பிஎஸ் குகன், விசாகா மீடியா அன்பு ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்த பயிற்சி மையம் உருவாகியுள்ளது. “பயிற்சி மையத்தில் சேரும் திறமையான அனைவருக்கும் திரைத்துறையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் பயிற்சி மையத்திற்கான அட்மிஷனைத் தொடங்கியிருக்கிறது MIOFT.”

(function($){ function bsaProResize() { var sid = "135"; var object = $(".bsaProContainer-" + sid + " .bsaProItemInner__img"); var animateThumb = $(".bsaProContainer-" + sid + " .bsaProAnimateThumb"); var innerThumb = $(".bsaProContainer-" + sid + " .bsaProItemInner__thumb"); var parentWidth = "728"; var parentHeight = "90"; var objectWidth = object.parent().outerWidth(); // var objectWidth = object.width(); if ( objectWidth <= parentWidth ) { var scale = objectWidth / parentWidth; if ( objectWidth > 0 && objectWidth !== 100 && scale > 0 ) { animateThumb.height(parentHeight * scale); innerThumb.height(parentHeight * scale); object.height(parentHeight * scale); } else { animateThumb.height(parentHeight); innerThumb.height(parentHeight); object.height(parentHeight); } } else { animateThumb.height(parentHeight); innerThumb.height(parentHeight); object.height(parentHeight); } } $(document).ready(function(){ bsaProResize(); $(window).resize(function(){ bsaProResize(); }); }); })(jQuery);

இதுபற்றி பயிற்சி மையத்தின் பங்குதாரரும், மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, முயல், மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி Part 2 உள்ளிட்ட படங்களின் இயக்குனர் கின்னஸ் சாதனையாளர் எஸ்பிஎஸ் குகன் கூறுகையில், எங்களது பயிற்சி மையத்தில், போட்டோகிராபி, வீடியோ கிராபி, கேண்டிட் வீடியோகிராபி, கேண்டிட் போட்டோகிராபி, ஷார்ட் பிலிம் புரொடக்‌ஷன், ஷார்ட் பிலிம் கேமராமேன், எடிட்டிங், ஆல்பம் சாங் எடிட்டிங், ஷார்ட் பிலிம் எடிட்டிங், பிலிம் டைரக்‌ஷன், பிலிம் ஆக்டிங், சினிமாட்டோகிராபி உள்ளிட்ட திரைத்துறைக்குத் தேவையான அத்தனை பயிற்சிகளும் குறைவான கட்டணத்துடன் அளிக்கப்படுகிறது, என்றார்.

மேலும் அவர் கூறுகையில், சினிமாவின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய சென்டராக மதுரைதான் இருக்கிறது. சினிமா துறையில் மதுரையைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். நிறைய பேர் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் சென்னை செல்கிறார்கள். அரசு பயிற்சி மையத்தில் இடம் கிடைப்பதில்லை. வேறு வழியின்றி தனியார் பயிற்சி மையத்தை நாடுகிறார்கள். நானும் அந்த கஷ்டத்தை அனுபவித்துள்ளேன். சினிமாவைப் படிக்க வேண்டுமானால் சென்னைதான் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் எண்ணம். அதன் பிரதிபலிப்பாகவே இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது, என்றார்.

பயிற்சி வகுப்புகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டைரக்டர் குகன், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நிறைய இளைஞர்கள் சினிமாவில் சாதிக்க வேண்டுமென்ற துடிப்போடு இருக்கிறார்கள். ஏராளமான கதைக்களத்தோடு இருக்கும் அவர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்ற வழிகாட்டுதல் இல்லை. பொதுவாக சினிமா என்றால் ஆர்ட்டிஸ்ட், கேமரா என்ற லெவலில்தான் பலரும் நினைக்கிறார்கள். அது அப்படியல்ல. சூட்டிங் முடிந்த பிறகு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் எப்படி இருக்கிறதோ… அதுபோல சினிமா சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பு ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் நிறைய இருக்கின்றன.  அவற்றையெல்லாம் முழுமையாய் கற்றுக் கொடுக்கும் பணியை எங்களது பயிற்சி மையம் செய்யவிருக்கிறது. முக்கியமாக தியரி வகுப்புகளை விட… நேரடியாக சூட்டிங்கில் பங்கேற்பது, படத்தை சூட் செய்வது, நடிப்பது, இயக்குவது என ப்ராக்டிக்கலாக சொல்லித் தரவுள்ளோம், என்றார்.

மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் டெக்னாலஜியில் வருகிற 26-10-2020 விஜயதசமி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. இங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் மற்றும் கட்டண விபரங்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள 9788399159 மற்றும் 8838138985 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More