மதுரையில் வீடியோகிராபி பயிற்சி வகுப்பு நவம்பர் 30ம்தேதி முதல் துவக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையில் முழுமையான வீடியோகிராபி நுணுக்கங்களை மூன்றே நாளில் கற்றுக் கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் டெக்னாலஜி (MIOFT) சினிமா பயிற்சி மையம் சார்பில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பை லிம்கா சாதனையாளரும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான SPS குகன் நடத்தவிருக்கிறார்.

நவம்பர் 30ம்தேதி தொடங்கி டிசம்பர் 2ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது ஆரம்ப நிலை ஷாட் ஆங்கிள் முதல் இன்று ட்ரெண்டிங்கில் இருக்கும் நவீன தொழில்நுட்பம் மற்றும் சூட்டிங் நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படும்.

முக்கியமாக couple shoot, indoor & outdoor lights, creative lighting shoot உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களையும், நுணுக்கங்களையும் பயிற்சிக்கு வரும் வீடியோகிராபரையை செய்ய வைத்து கற்றுக் கொடுக்கப் படும். இதற்காக பிரத்யேகமாக பாடத்திட்டம் உருவாக்கியுள்ளோம், என்று டைரக்டர் SPS குகன் தெரிவித்துள்ளார்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், மேலும் விபரங்களை பெறவும் 8754728184 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் டெக்னாலஜி கேட்டுக் கொண்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More