அரசு இராஜாஜி மருத்துவமனை

Get real time updates directly on you device, subscribe now.

அரசு இராசாஜி மருத்துவமனை மதுரையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைச் சார்ந்த இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மூன்றாம் நிலை சிகிச்சையை வழங்கி வருகிறது. இம்மருத்துவமனை எர்கினசு மருத்துவமனை என முன்பு அழைக்கப்பட்டது. 1842 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை, 1872 மதுரை நகராட்சியின் கட்டுப்பாட்டிலும், பின் 1918 இலிருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

1954 இல் இருந்து கற்பிக்கும் கல்லூரியாகவும் இந்த மருத்துவமனை உள்ளது. மருத்துமனையின் மொத்த பரப்பளவு 12.47 ஏக்கர்கள் (5.05 ha). படுக்கைகளின் எண்ணிக்கை 1,574. மதுரை மருத்துவக் கல்லூரி இம்மருத்துவமனையுடன் இணைப்புப் பெற்றுள்ளது.

இம்மருத்துவமனையில் 24 மணி நேரம் அவசர சிகிச்சை உதவி மற்றும் ஆய்வுக்கூட வசதி ஆகியவை உள்ளன. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் இம்மருத்துவமனை வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

அரசு ராஜாஜி மருத்துவமனை
பனகல் ரோடு, மதுரை – 625 020
மின்னஞ்சல் : [email protected]
தொலைபேசி : 0452 2533230

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader