IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனாவை தடுக்க மதுரை மாவட்ட ஆட்சியரின் அதிரடியால் ஆடிப்போன பொதுமக்கள்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தமிழக முதல்வர் பழனிச்சாமியின் அறிவுரை படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் போன்றவை இருப்பிடத்திற்கு அருகில் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

எனவே அத்தியாவசிய பொருட்கள் வாங்க விரும்பும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய பணிகள் ஈடுபடக் கூடிய அலுவலர்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் வாகன பயணங்கள் மேற்கொள்ள ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றலாம்.

அத்தியாவசிய பணிகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடரும். மேலும் வாகன அனுமதி தொடர்பாக எடுக்கப்பட முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader