IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் அக்டோபர் 19ல் டிஜிட்ஆல் சங்கமம் கருத்தரங்கம்

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து டிஜிட்ஆல் சங்கமம் 2019 என்ற ஒரு நாள் கருத்தரங்கு வருகிற அக்டோபர் 19ம்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் மேதகு. டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களால் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 18ம்தேதி தொடங்கப்பட்ட அமைப்பு டிஜிட்ஆல் (DIGIT ALL). இந்த அமைப்பு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசனால் நடத்தப்பட்டு வருகிறது.

உலக மயமாக்கல்கள் நடைபெறும் இந்நிலையில் சுயதொழில் புரியும் சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் நாள்தோறும் உள்நாட்டு & வெளிநாட்டு போட்டிகளையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.

மேற்சொன்ன அனைத்து பயனாளர்களும் இன்றைய இண்டர்நெட் உலகிலும் அதன் பயன்பாட்டிலும் உள்ள இடர்பாடுகள் & சவால்களாகிய இண்டர்நெட் பிராட் & சைபர் கிரைம் போன்றவற்றை பற்றி விழிப்புணர்வு வழங்குவதற்காகவும், அதிலிருந்து தற்காத்து கொண்டு பாதுகாப்பாக பயன்படுத்த பயிற்சி அளிப்பதற்காகவும் டிஜிட்ஆல் அமைப்பு தொடங்கப்பட்டது.

சமூக வலைதளங்கள் மூலம் தொழிலை பெருகச் செய்வதும், வருமானத்தை இரட்டிப்பாக்குவது போன்ற தொழில் சார்ந்த தகவல்களை தமிழில் அனவருக்கும் தெரியப்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை டிஜிட் ஆல் அமைப்பு தனது பணியினைச் சிறப்பாகச் செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிஜிட்ஆல் அமைப்பின் முத்தாய்ப்பு விழாவாக டிஜிட்ஆல் சங்கமம் என்ற மாபெரும் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் டிஜிட்டல் உலகின் ஜாம்பவான்கள் பலர் கலந்து கொண்டு டிஜிட்டல் குறித்து கலந்துரையாடினார்கள்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டிஜிட் ஆல் சங்கமம் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 19ம்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து மதுரையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க ஹட்சன் அரங்கில் முழுநாள் (காலை 9 முதல் மாலை 6 வரை) உச்சிமாநாடு நடைபெற உள்ளது. கணினி மற்றும் இணைய தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 600 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பி.தியாகராஜன் எம்.எல்.ஏ., ஏஞ்சல் இன்வெர்ஸ்டர், முதலீடு ஆலோசகர் நாகராஜ பிரகாசம், கோப்ருகல் டெக்னாலஜிஸ் குமார் வேம்பு, கே7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் சிஇஓ கே.புருஷோத்தமன், இன்புளூயன்சர், மாடல் ஸ்வேதா சேகர், நேட்டிவ் லீட் அமைப்பின் சிஇஓ சிவராஜா ராமநாதன், டாட் காம் இன்போ வே நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் ராஜேந்திரன், ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் கே.திருப்பதிராஜன், அடடா கிரியேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் விஜய் கார்த்திகேயன், ஸ்கைடூ ஸ்டூடியோஸ் இயக்குனர் ஷிவா நந்தி, எச்.சி.எல். மதுரை மைய தலைவர் பி.சுப்பாராமன், ட்ரெண்ட் மியூசிக் நிறுவனத்தின் இயக்குனர் மது அலெக்சாண்டர், இண்ட்ரெஸ்டிக் நிறுவனத்தின் சிஇஓ பூமி பாலசுப்பிரமணியன், சாப்ட் ஸ்கொயர் சொல்யூசன்ஸ் துணைத்தலைவர் எம்.வெற்றிவேந்தன், தங்கமயில் ஜூவல்லரி பொதுமேலாளர் பி.பிரசன்னன், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனத்தின் ஏஜிஎம் தீபக் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசன் தலைவர் எஸ்.ரத்தினவேலு, தமிழ்நாடு சேம்பர் தலைவர் என்.ஜெகதீசன், இளம் தொழில்முனைவோர் மையத்தின் தலைவர் வி.நீதிமோகன், டிஜிட் ஆல் அமைப்பின் தலைவர் ஜே.கே.முத்து, டிஜிட்ஆல் சங்கமம் 2019 ஒருங்கிணைப்பாளர் மதன் வைப்ரநாராயணன் ஆகியோர் செய்துள்ளனர்.
#Madurai #DIGITALLSANGAMAM2019 #In4Net #TNChamber

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader