IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை டிஜிட்ஆல் சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ரெடியா? உடனே முன்பதிவு செய்ய அழைப்பு!!

0 84

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து டிஜிட்ஆல் சங்கமம் -2019 என்ற பெயரில் டிஜிட்டல் மாநாடு மதுரையில் அக்டோபர் 19ம்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. டிஜிட்டல் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு முழுக்க முழுக்க தமிழில் தீர்வு வழங்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் உடனடியாக 9791999732 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது http://bit.ly/digitall2019, என்ற முகவரி மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

டிஜிட்ஆல் அமைப்பு குறித்து தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசன் தலைவர் எஸ்.ரத்தினவேலு கூறுகையில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 18ம்தேதி டிஜிட்ஆல் (DIGIT ALL)அமைப்பை தொடங்கி வைத்தார். . இந்த அமைப்பு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசனால் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய இண்டர்நெட் உலகிலும் அதன் பயன்பாட்டால் சுயதொழில் புரியும் சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் நாள்தோறும் உள்நாட்டு & வெளிநாட்டு போட்டிகளையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.

டிஜிட்ஆல் அமைப்பு தொடங்க முக்கிய காரணம் இடர்பாடுகள் & சவால்களாகிய இண்டர்நெட் பிராட் & சைபர் கிரைம் போன்றவற்றை பற்றி விழிப்புணர்வு வழங்குவதற்காகவும், அதிலிருந்து தற்காத்து கொண்டு பாதுகாப்பாக பயன்படுத்த பயிற்சி அளிப்பதற்காகவும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது, என்றார்.

டிஜிட்ஆல் அமைப்பின் முக்கிய நோக்கம் மற்றும் டிஜிட் ஆல் சங்கமம் குறித்து அமைப்புத் தலைவர் ஜே.கே.முத்து கூறுகையில், அனைவரும் இண்டர்நெட்டை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் டிஜிட் ஆல் அமைப்பு செயல்படுகிறது. எங்களது அமைப்பு பல்வேறு கிராமப்புறங்களுக்குச் சென்று டிஜிட்டல் அறிவை போதித்து வருகிறது. மாணவர்கள், இளம் தலைமுறையினரை விட பெண்கள், முதியவர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்வமுடன் டிஜிட்டல் குறித்து தெரிந்து கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு டிஜிட்ஆல் சங்கமம் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 2வது பதிப்பாக டிஜிட்ஆல் சங்கமம் 2019 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 19ம்தேதி நடைபெற உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து மதுரையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க ஹட்சன் அரங்கில் முழுநாள் (காலை 9 முதல் மாலை 6 வரை) உச்சிமாநாடு நடைபெற உள்ளது. கணினி மற்றும் இணைய தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொள்கிறார்கள், என்றார்.

டிஜிட்ஆல் சங்கமம் 2019 ஒருங்கிணைப் பாளர் மதன் வைப்ரநாராயணன் கூறுகையில், இந்த ஆண்டு சங்கமத்தில், சிறப்பு விருந்தினர்களாக பி.தியாகராஜன் எம்.எல்.ஏ., ஏஞ்சல் இன்வெர்ஸ்டர், முதலீடு ஆலோசகர் நாகராஜ பிரகாசம், கோப்ருகல் டெக்னாலஜிஸ் குமார் வேம்பு, கே7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் சிஇஓ கே.புருஷோத்தமன், இன்புளூயன்சர், மாடல் ஸ்வேதா சேகர், நேட்டிவ் லீட் அமைப்பின் சிஇஓ சிவராஜா ராமநாதன், டாட் காம் இன்போ வே நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் ராஜேந்திரன், ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் கே.திருப்பதிராஜன், அடடா கிரியேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் விஜய் கார்த்திகேயன், ஸ்கைடூ ஸ்டூடியோஸ் இயக்குனர் ஷிவா நந்தி, எச்.சி.எல். மதுரை மைய தலைவர் பி.சுப்பாராமன், ட்ரெண்ட் மியூசிக் நிறுவனத்தின் இயக்குனர் மது அலெக்சாண்டர், இண்ட்ரெஸ்டிக் நிறுவனத்தின் சிஇஓ பூமி பாலசுப்பிரமணியன், சாப்ட் ஸ்கொயர் சொல்யூசன்ஸ் துணைத் தலைவர் எம்.வெற்றிவேந்தன், தங்கமயில் ஜூவல்லரி பொதுமேலாளர் பி.பிரசன்னன், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனத்தின் ஏஜிஎம் தீபக் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள், என்றார்.

டிஜிட் ஆல் சங்கமம் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசன் தலைவர் எஸ்.ரத்தினவேலு, தமிழ்நாடு சேம்பர் தலைவர் என்.ஜெகதீசன், இளம் தொழில்முனைவோர் மையத்தின் தலைவர் வி.நீதிமோகன், டிஜிட் ஆல் அமைப்பின் தலைவர் ஜே.கே.முத்து, டிஜிட்ஆல் சங்கமம் 2019 ஒருங்கிணைப் பாளர் மதன் வைப்ரநாராயணன் ஆகியோர் செய்துள்ளனர்.

டிஜிட்டல் கருத்தரங்கம் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ளவும், முன்பதிவு செய்யவும் 9791999732 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது http://bit.ly/digitall2019, என்ற முகவரி மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.


#digital #madurai