மதுரையில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பால் குணமடைவோர் எண்ணிக்கை குறைவு

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வேகத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மதுரையில் தினம்தோறும் 250 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பின் அதிகரிப்பால், நோயாளிகள் குணமடையும் வேகம் வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை 24.6 சதவீதம் பேர் தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் ஜுன் மாத பாதிப்பிற்கு பிறகு கொரோனா வெறியாட்டத்தை தொடங்கியுள்ளது. இதனால் தினமும் 200லிருந்து 300 பேர் வரை பாதிப்பு பட்டியலில் இடம் பிடிக்கத் தொடங்கினர். கடைசி இரண்டுவார பாதிப்பு மதுரையை புரட்டிப் போட்டுள்ளது.

நேற்று காலை வரை கொரோனா பாதிப்பு 4338ஆக இருந்தது. 69 பேர் இறந்திருந்தனர். இறப்பு விகிதம் 1.59. இது குறைவாக தெரியலாம். ஆனால் சென்னை (1.54) மற்றும் தமிழகத்தின் (1.36) மொத்த இறப்பு விகிதத்தை விட அதிகம்.

சென்னையில் கொரோனா பாதிப்பு இதே அளவு இருக்கும் போது அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 32 தான். ஆனால் மதுரையில் 69 பேர் இறந்துள்ளனர். இது மதுரைக்கான எச்சரிக்கை தகவல். முன்னதாகவே நோயை கண்டுபிடிப்பது, சிறப்பான சிகிச்சை, கவனிப்பு மூலம் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

இன்னொரு புறம் சிகிச்சை பெற்று குணமானவர்கள் விகிதத்திலும் மதுரை பின்தங்கியுள்ளது. இந்தியா, தமிழகத்தின் டிஸ்சார்ஜ் விகிதத்தில் பாதியளவு கூட இல்லை. கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் 4வது இடத்தில் மதுரை உள்ளது.

முதல் 3 இடங்களில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை விடவும் மதுரையின் டிஸ்சார்ஜ் விகிதம் மிகக்குறைவு. இதுவரை 24.6 சதவீதம் பேர் தான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே ‘ஆக்டிவ் கேஸ்’ எண்ணிக்கை அதிகமாக உள்ளது.எனவே கொரோனா மீட்பு நடவடிக்கையில் மதுரைக்கு இன்னும் சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், ஜுன் 2ம் தேதிக்கு பிறகு தான் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பிற மாவட்டங்களிலோ படிபடியாக தான் உயர்ந்தது. இந்நிலையில் மதுரையில் பரிசோதனையை அதிகப்படுத்தி நோயாளிகளை கண்டுபிடிக்கிறோம். பாதிப்பின் வேகம் இருவாரங்கள் என்பதால் குணமடைவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader