IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது! கட்டுப்பாடுகளை அதிகாரிக்கும் மாநகராட்சி

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தடுக்கும் நடவடிக்கையாக மதுரையில் வருகின்ற ஜுலை 12ம் தேதி வரை ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3,776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந் நிலையில் மேலும் 315 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,091 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 994 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 57 பேர் பலியாகி இருக்கின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader