IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரை சித்திரை திருவிழாவை அறிவிக்கும் கால்கோல் நடும் விழா

Get real time updates directly on you device, subscribe now.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை அறிவிக்கும் வண்ணம் கீழமாசி வீதி தேர்முட்டியில் நேற்று கால்கோல் நடும் விழா நடந்தது.


இக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 8 காலை 10:05 மணிக்கு மேல் காலை 10:29 மணிக்குள் நடக்கிறது. ஏப்.,15 மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இரவு 8:00 மணிக்கு மேல் இரவு 8:24 மணிக்குள் நடக்கிறது.


ஏப்.,16 திக்குவிஜயம், ஏப்.,17 திருக்கல்யாணம் காலை 9:50 மணிக்கு மேல் காலை 10:14 மணிக்குள் நடக்கிறது. ஏப்.,18 காலை 5:45 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.


விழாவை முறைப்படி அறிவிக்கும் வண்ணம் கீழமாசிவீதி தேர்முட்டி மண்டபத்தில் கால்கோல் விழா நேற்று ஹாலாஸ் பட்டர் தலைமையில் நடந்தது. இணை கமிஷனர் நடராஜன், பேஸ்கார் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader