IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரை சிஇஓஏ பள்ளி கின்னஸ் சாதனை முயற்சி

Get real time updates directly on you device, subscribe now.

 

ஒரே நேரத்தில் ஏழாயிரம் மாணவர்கள் ஒன்றுகூடி மரம் வளர்ப்பு குறித்த ஓவியம் வரையும் கின்னஸ் சாதனை முயற்சியை மதுரை சிஇஓஏ பள்ளி மேற்கொண்டது.

மதுரை சிஇஓஏ பள்ளியின் 25ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அப்பள்ளியின் பல்வேறு கிளைகளை சேர்ந்த ஏழாயிரம் மாணவர்கள் பங்கேற்கும் கின்னஸ் ஓவிய போட்டி ஏற்பாடு செய்யபட்டது.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் மாணவர்கள் அனைவரும் மரம் வளர்ப்பு குறித்த ஒரேமாதிரியான ஓவியத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரைந்து முடிக்கும் சவாலை ஏற்றனர். ஏழாயிரம் மாணவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்து தங்களின் சாதனையை நிறைவேற்றினர்.

பள்ளி நிர்வாகத்தினர் இறுதிவரை மாணவர்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்தினர். இதற்கு முன்பாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பள்ளி ஒன்று 2,000 மாணவர்களைக் கொண்டு இதுபோன்ற சாதனையை நிகழ்த்தியதாக கூறப்படும் நிலையில் 7 ஆயிரம் மாணவர்களை வைத்து மதுரை பள்ளி நடத்திய இந்த சாதனை கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

#madurai #CEOA #School #Try #Guinness #Adventure

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader