IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் சமூக இடைவெளியின்றி வெளியில் நடமாடும் பொதுமக்கள்

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையில் கொரோனா தெற்று நாளுக்கு நாள் பரவி வருவதையொட்டி மதுரையில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 758 பேர் உள்ளனர்.

இதனால் அத்திய வாசிய பொருள்கள் வாங்குவதற்கு இன்று காலையில் இருந்து கோரிப்பாலையம், கீழ மாசி வீதி. யானைக் கல்பாலம். தெற்கு மாசி வீதி ஆகிய பகுதிகளில் அரிசி. காய்கறிகள் மளிகை பொருள் வாங்குவதற்கு கடைகளில் ஒரு சில இடங்களில் சமூக இடைவெளியை பற்றியும். சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொருள்களை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.

இதனால் பொருள்கள் வாங்குவதற்கு டுவீலர் வாகனங்களில் வந்தவர் வண்டி நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் தவித்தனர். இதனால் கீழமாசி வீதி, மற்றும் தெற்கு மாசி வீதிகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து சென்றதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை தவித்தனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader