IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

5 பவுனுக்காக பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம்

42

ஐந்து பவுன் நகைக்காக பெண்ணை கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை திருமங்குலம் அருகே உள்ள அன்னகாமு தோட்டத்தை சேர்ந்தவர் துரை சாமி அவரது மனைவி காவேரி அம்மாள். இவருக்கு ஒரு வளர்ப்பு மகன் உள்ளார். துரை சாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் கதர்ஷா என்பவர் காவேரி அம்மாளுக்கு காய்கறி வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட சிறு, சிறு உதவிகள் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு காதர்ஷா வழக்கம் போல் காவேரி அம்மாளுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென காவேரி அம்மாளின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை காதர்ஷா பறிக்க முயன்றுள்ளார். உடனே அவர் சத்தம் போட்டார்.

இதனால் பயந்து போன காதர்ஷா தான் வைத்திருந்த கத்தியை எடுத்து காவேரி அம்மாளின் கழுத்தை அறுத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த காவேரி அம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே காவேரி அம்மாளின் கழுத்தை அறுத்த காதர்ஷா விரைந்து எதிரே உள்ள அவரது வீட்டின் மாடிக்கு சென்று விட்டார். பின்னர் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். தகவல் அரிந்த போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சு கொடுத்து நைசாக அவரை மடக்கி கைது செய்தனர்.

காதர்ஷாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். மனைவியும், மகள்களும் உள்ளனர். மனைவியும் மகள்களும் வெளியே சென்றிருந்த நேரத்தில் தான் அவர் காவேரி அம்மாளை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

5பவுன் நகைக்காக நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.