IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை வழங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திகண்மணி

244

 

தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திகண்மணி திரவியம் வழங்கினார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோடாங்கிபட்டி கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் (2019-2020) ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திகண்மணி திரவியம் வழங்கினார். இதில் 46 பயனாளிகளுக்கு மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.

Related Posts
1 of 74

பயனாளிகள் ஒரு நபருக்கு மொத்தம் நான்கு ஆடுகள் வீதம் 46 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர் ஜோசப்அய்யாதுரை கால்நடைகளை பரிசோதனை செய்து ஆடுகள் வளர்ப்பதற்காக பயனாளிகள் நபர் ஒருவருக்கு 10000ரூ மற்றும் கொட்டகை அமைப்பதற்கு 2000ரூ என மொத்தம் ஒரு நபருக்கு 12 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆடுகளுக்கும் தமிழக அரசு டாக் பொருத்தப்பட்டது. கால்நடை உதவி இயக்குனர் சரவணன், ராஜா, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மச்சராஜா, ஊராட்சி செயலாளர் மாணிக்கம் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பயனாளிகள் அனைவரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

#Madurai #alaganallur #Panchayat #Council #Sugandikanmani #providing #freegoats