IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரை ஆகாஷ் பயிற்சி மையத்தின் மாணவி ஸ்ரேயா சாதனை

Get real time updates directly on you device, subscribe now.

 

ஆகாஷ் பயிற்சி மையத்தின் மாணவி ஸ்ரேயா பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வில் 99.90% பெற்று பெருமை சேர்த்துள்ளார். இயற்பியலில் 99.81%, வேதியியலில் 99.90% மற்றும் கணிதத்தில் 99.51% சதவீதத்துடன் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுபற்றி பயிற்சி மையத்தின் தலைவர் ஆகாஷ் சௌத்ரி கூறுகையில், ஸ்ரேயா 99.87 சதவீதத்துடன் மெயின்ஸ் தேர்ச்சி பெற்றது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இது மாணவி ஸ்ரேயா மற்றும் எங்கள் பயிற்சி ஆசிரியர்களின் கடின உழைப்பின் வெற்றி ஆகும். எங்கள் பயிற்சி மையத்தின் தரமான தேர்ச்சி பட்டறைகள் முனிர் அஹமதின் வெற்றிக்கு வழி வகுத்தது. ஸ்ரேயாவின் வருங்கால முயற்சிகளுக்கும், வெற்றிகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இலக்குகளை அடைய கடுமையாக உழைக்கும் எங்கள் மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், என்றார்.

மாணவி ஸ்ரேயா கூறுகையில், எனது வெற்றிக்குக் காரணம் ஆகாஷ் பயிற்சி நிறுவனம்தான் என்றும், ஆகாஷூக்கு எனதுத நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

பொறியியல் நுழைவுக்கான ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வை என்.டி.ஏ., ஜனவரி 7 மற்றும் 9ஆம் தேதிகளில் ஒரு நாளுக்கு இரு முறையாக இந்தியாவில் 233 நகரங்களிலும், வெளிநாட்டிலும் நடத்தியது. இந்த பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு மொத்தமாக 9,21,261 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டன.

#madurai #AkashTrainingCenter #Shreya #student

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader