IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விவசாய பணியில் ஆர்வம் காட்டும் கல்லூரி மாணவிகள்

0 17

விவசாயிகளுடன் இணைந்த மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து விவசாயப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டனர்.

மதுரை அருகே உள்ள கருமாத்தூரில் விவசாயப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் கருமாத்தூரில் முகாமிட்டு தங்கியுள்ளனர். கல்லூரி மாணவிகள் வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து பல்வேறு பயிற்சிகளுடன் விவசாயப் பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

கரிசல்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் அட்சயா என்னும் நெல் ரகத்தை பயிரிட்டுள்ளார். அந்த நிலத்தில் மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் கற்பகம், கீர்த்தனா மற்றும் பல மாணவிகள் இணைந்து விவசாய தொழிலாளர்களுடன் இணைந்து நடவு பணியில் ஆர்வமாக ஈடுபட்டனர்.

கல்லூரியில் பயிலும் மாணவிகள் விவசாய நடவுபணியில் ஆர்வமாக கலந்து கொண்ட நிகழ்வு விவசாயத்திற்கு மீண்டும் ஒரு புத்துணர்வு கிடைக்கும் என கிராமத்து மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

#agriculture #collegestudent #madurai