IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரையில் தேவர் ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம் – முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு

138

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி, 57வது குருபூஜை தினத்தை முன்னிட்டு இன்று மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் சேர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்பு ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது. 1979-ம் ஆண்டு முதல் தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன்னாக (சுத்தமான தங்கம்) விளங்கிய தேவர் பெருமகனாரின் 112வது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க பாடுபட்ட தேவர் திருமகனார் வழியில் என்றும் பயணிக்க உறுதியேற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.