IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய டியூசன் ஆசிரியை

46

மத்தியபிரதேசத்தில் தன்னிடம் டியூசன் படிக்க வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், அதனை வீடியோவாக எடுத்து காதலனுக்கு அனுப்பிய டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் டியூசன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். அப்பகுதி சிறுவர், சிறுமிகளுக்கு ஏராளமானோர் படிக்க வந்துள்ளனர். மாணவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுக்கும் சமயத்தில் அந்த பெண் தனது காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பாராம். மேலும் டியூசன் படிக்க வரும் சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்பி வந்துள்ளார்.

சம்பவத்தன்று டியூசன் படிக்க வந்த 3 வயது சிறுமியின் அந்தரங்க பாகங்களுக்குள் பென்சிலை நுழைத்து ஆசிரியை துன்புறுத்தியுள்ளார். பின்னர் அதனை வீடியோ பதிவு செய்து தனது காதலனுக்கு அனுப்பியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி வீட்டுக்கு சென்று தனது அம்மாவிடம் இது பற்றி தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரித்த போது அந்த சிறுமியின் அக்காவான 6 வயது சிறுமிக்கும் இதே போல் அந்த ஆசிரியை பாலியல் தொல்லை அளித்துள்ள தகவல் தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்த போது தனது காதலன் கேட்டுக்கொண்டதால் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரது காதலனையும் கைது செய்தனர். மேலும் அவர்களது செல்போன்களில் இருந்து வீடியோக்களை பறிமுதல் செய்ததுடன், இருவரும் மீது போக்சோ சட்டத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#MadhyaPradesh #tusion #Teacher #Arrested