IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மாடித் தோட்டம் அமைப்பதற்கான வழி முறைகள் !

Get real time updates directly on you device, subscribe now.

மாடியில் தோட்டம் அமைக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் வழிதான் தெரியவில்லை என்று வருந்தி ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

மாடித்தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்ய வேண்டியது இடத்தைத்தான். இதற்கென தனியாக ஒர் இடம் தேவையில்லை. மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள் என மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடமும், வழியும் உள்ளது.

இதனால் மொட்டைமாடியின் தளம் வீணாகும் என்ற கவலை வேண்டாம். கீழே பாலித்தீன் விரிப்பினை விரித்து அதன்மீது வைக்கலாம். இது தவிர, பிவிசி பைப்புகள், கட்டையாலான பலகைகள் எனப் பல தீர்வுகள் இருக்கின்றன.

முதலில் நாம் தேர்வு செய்ய வேண்டியது வெயில்படும் படியான இடம். அதிக வெயில் படும்படியான இடங்களில் நிழல்வலைக்குடில் அமைப்பது சிறந்தது. நிழல் வலைக் குடில் அமைப்பதற்குப் பல எளிய வழிமுறைகளும் இருக்கின்றன.

பொதுவாகத் தொட்டிகள் அமைக்கும்போது எல்லா தொட்டிகளையும் ஒன்றாக அமைக்காமல், எளிதாகப் பராமரிக்கும் செடிகளைத் தனியாகவும், அதிகநேரம் பராமரிக்கும் செடிகளை தனியாகவும் பிரித்தும் அமைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பைகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்ட பொருட்களில் செடிகளை வளர்க்கலாம். இந்த தொட்டிகளில் செம்மண், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, ஆகியவை கலந்து அடியுரமாகக் கொடுக்க வேண்டும். தென்னை நார்கழிவானது மண்ணின் ஈரப்பதத்தை முழுமையாகத் தக்க வைத்து செடிகளைக் காக்கும்.

அளவுக்கு அதிகமாகப் போட்டால் செடிகளுக்கு வேர் அழுகல் நோய் ஏற்பட்டு வேர்கள் செடிகள் பாதிப்படையும்.

செம்மண், மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்களும் பயிர்கள் வளர்வதற்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கும். வேப்பம் பிண்ணாக்கு பயிர்களுக்கு நோய்கள் வராமல் தடுத்து, கிருமிகளை அழிக்கும்.

மண்கலவை தயாரானதும் உடனே விதைகளை விதைக்கக் கூடாது. 7 முதல் 10 நாட்களில் நாம் தயார் செய்த மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதன் பிறகே அதில் எந்த ஒரு விதையையும் நடவு செய்ய வேண்டும். இதன் பிறகு விதைப்பு செய்தால், நல்ல விளைச்சல் நிச்சயம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader